Monday, December 8, 2008

வசந்தமே வா...

வரமாய் நீ
கிடைக்கும்வரை என்
வாலிப தவம்
கலையாது...

நதியாய் நீ
பாயும்வரை என்
இளமை அணை
நிறையாது...

அமுதமாய் நீ
வழியும்வரை என்
இதயக்கோப்பை
நிறையாது...

வசந்தமாய் நீ
வரும்வரை என்
வாழ்க்கை வாசல் கதவு
மூடாது...